தோழி இறந்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை

திருவனந்தபுரம்: நெருங்கிய தோழி தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த பத்தாம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். திருவனந்தபுரம் அருகே காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்த தம்பதி சாமுவேல், லலிதாம்பிகா. இவர்களது மகள் அபியா (15). இவர் அருகிலுள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அபியாவின் நெருங்கிய தோழியான ஒன்றாக படிக்கும் தீர்த்தா என்ற மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இது அபியாவுக்கு கடும் மனவேதனையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் நேற்று மாலை அபியா வழக்கம்போல பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். பின்னர் தன்னுடைய அறைக்கு சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த தாய் லலிதாம்பிகா அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அபியா தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெருங்கிய தோழி தற்கொலை செய்ததால் மனமுடைந்து அபியாவும் உயிரை மாய்த்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

Related Stories: