சிலம்புச்செல்வர் சிவஞானம் 121-ஆவது பிறந்த நாள்; அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை!

 

சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில், சிலம்புச்செல்வர் சிவஞானம் அவர்களின் 121-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அமைச்சர் பெருமக்கள் இன்று (26.6.2026) சென்னை, தியாகராய சாலையில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.’சிலம்புச்செல்வர்’ பொன்னுசாமி கிராமணியார் அன்று மகனாகப் பிறந்தார். சென்னையில் சிவஞானம் அவர்கள் சிவகாமி அம்மாள் தம்பதியினருக்கு 26.6.1906 சிவஞானம் அவர்கள் சிறுவயது முதல் தமிழ் மொழி மீது கொண்ட தீராப் பற்றின் காரணத்தினால் சிறந்த தமிழ் அறிஞராகத் திகழ்ந்தார். தான் பெற்ற அனுபவத்தாலும், சுய முயற்சியாலும் தமிழில் தக்க புலமையோடு செந்தமிழ்ச் செல்வராகவும், சிறந்த தலைவராகவும், தமிழறிஞராகவும் விளங்கினார். ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளை நன்கு கற்றறிந்து கிராமணி குலம், தமிழ் முரசு, தமிழன் குரல், செங்கோல் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்தார். சிலப்பதிகாரத்தை உலகறியச் செய்திட வேண்டும் என்கிற வேட்கையில், சிலப்பதிகார மாநாடுகள் பல நடத்தினார். சிலம்பின் மேல் இவர் கொண்டிருந்த காதலை அறிந்த ரா.பி.சேதுப்பிள்ளை, நாகர்கோவிலில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் ‘சிலம்புச் செல்வர்’ என்னும் பட்டத்தை சிவஞானம் அவர்களுக்கு வழங்கினார்.

சிவஞானம் அவர்கள் பத்திரிகை ஆசிரியர், பேச்சாளர் என்பதோடு மட்டுமல்லாது, சிறந்த நூலாசிரியராகவும் திகழ்ந்தார். அவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களில், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழன் குரல், வீரக் கண்ணகி மற்றும் விடுதலைப் போரில் தமிழகம் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இந்திய விடுதலைப் போராட்டம் குறித்தும், அந்நூலில் தமிழ்நாட்டின் பங்களிப்பினைத் தொகுத்து “விடுதலைப் போரில் தமிழகம்” என்கிற தமிழில் முதலில் வெளிவந்த இந்நூல் இன்றளவும் சரித்திரச் சான்றாக உள்ளது. 1927-ஆம் ஆண்டு சாதாரணத் தொண்டராக காங்கிரசில் சேர்ந்து, இந்திய எதிர்ப்பு சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஆங்கிலேயருக்கு தெரிவித்த காரணத்தினால் ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், தமிழக வடக்கு எல்லைப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திராவைப் பிரித்து, தனி ஆந்திர மாநிலம் அமைத்திடும் ஒன்றிய அரசு முடிவுக்கு ‘மதராஸ் மனதே’ என்று ஆந்திரர்கள் எழுப்பிய குரலுக்கு சிவஞானம் அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

“தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று வீரமுழக்கமிட்டார். சிவஞானம் அவர்களின் தீவிர எல்லைப் போராட்டத்தின் காரணமாக திருத்தணி ஆந்திரர்களின் ஆளுமைக்குச் சென்று விடாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. ‘சிலம்புச் செல்வர்’ சிவஞானம் அவர்கள் சட்டமன்ற மேலவை உறுப்பினராக, சட்டமன்ற மேலவைத் தலைவராக திறம்பட பணியாற்றியதோடு, தமிழ் வளர்ச்சி உயர்நிலைக் குழுவின் தலைவராகவும் செயலாற்றினார். 1966-ஆம் ஆண்டு சிவஞானம் அவர்கள் எழுதிய “வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு” என்கிற நூலுக்கு ‘சாகித்ய அகாதமி விருது’ வழங்கப்பட்டதோடு, அன்னாரின் பொதுத் தொண்டினைப் பாராட்டி 1972-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருதினையும் வழங்கி கௌரவித்தது. பேரறிஞர் அண்ணா “மெட்ராஸ் ஸ்டேட்” என அழைக்கப்பட்டு வந்த சென்னை மாகாணத்திற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட வேண்டும் என்று முதன் முதலில் குரல் எழுப்பியவர் சிவஞானம் ஆவார். அதனைத் தொடர்ந்து அன்றைய முதலமைச்சர் அவர்கள் 1968-ஆம் ஆண்டு இதற்கான தீர்மானத்தை சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றினார். அன்று முதல் சென்னை மாகாணம் “தமிழ்நாடு” என்று அனைவராலும் அழைக்கப்பட்டது.

சிவஞானம் அவர்கள் தன் வாழ்நாள் முழுமையும் தமிழர்களின் நல்வாழ்வு ஒன்றையே தனது இலட்சியமாகக் கொண்டு 1946-ஆம் ஆண்டு தமிழரசு கழகத்தைத் தொடங்கினார். அரசியல், இலக்கியம், கலை ஆகியவற்றில் தமிழ், தமிழர், தமிழ்நாடு, பண்பாடு ஆகிய இவை அனைத்தையும் காக்க பாடுபட்ட செம்மலாவார். சிலம்புச் செல்வருக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், 2011-ஆம் ஆண்டு சென்னை, தியாகராயர் நகரில் சிலம்புச் செல்வர் சிவஞானம் அவர்களின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிலம்புச் செல்வர் சிவஞானம் அவர்களின் பிறந்த நாள் விழா ஜூன் மாதம் 26-ஆம் நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம். அருள் பிரகாசம், தென்றல் குமார். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை/ தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர்(பொ) திரு.வ.தட்சிணாமூர்த்தி,இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ்.இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: