புதுச்சேரி, ஜூன் 26: புதுச்ேசரி லாஸ்பேட் பகுதியைச் சேர்ந்த ஆண் நபர் ஒருவர், லோன் குறித்து விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். சிறிதுநேரம் கழித்து மர்ம நபர் ஒருவர் மேற்கூறிய நபரை தொடர்பு கொண்டு குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி மேற்கூறிய நபரும் விண்ணப்பித்து, விண்ணப்பத்துக்கான செயலாக்க கட்டணமாக ரூ.78 ஆயிரத்தை அனுப்பி ஏமாந்துள்ளார். மேலும் முதலியார்பேட்டையைச் சேர்ந்த ஆண் நபரின் வங்கி கணக்கலிருந்து அவருக்கு தெரியாமல் ரூ.41 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது.
முதலியார்பேட் பகுதியை சேர்ந்த ஆண் நபர் முகநூலில் வந்த முதலீடு தொடர்பான விளம்பரத்தை கிளிக் செய்து, அதில் வந்த லிங்க் மூலம் ரூ.17 ஆயிரத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளார். புதுவையை சேர்ந்த ஆண் நபர் ரூ.1,600, முத்தியால்பேட்டையை சேர்ந்த ஆண் நபர் ரூ.10 ஆயிரம் என மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். ேமற்கூறிய நபர்கள் மொத்தமாக ரூ.1.48 லட்சத்தை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
