×

மின்சார வாரியத்திற்கு TNPSC மூலம் தேவான 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்.

சென்னை: எரிசக்தி துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 நபர்களுக்கு உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 நபர்களுக்கு உதவிக் கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வு இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்று அனைவருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்பித்தார். அப்போது, நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அவர் இருக்கும் இடத்திற்கே சென்று பணி நியமன ஆணையை முதலமைச்சர் விஜய் வழங்கினார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : Chief Minister ,Vijay ,TNPSC ,Electricity Board ,Chennai ,Tamil Nadu Public Service Commission ,Energy Department… ,
× RELATED கல்பாக்கம் அருகே 14 வயது சிறுமியைக்...