நாளை மறுநாள் 25 ஆம் தேதி சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: நாளை மறுநாள் 25-ம் தேதி சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம்-பல்லாவரம் இடையே பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.20, 11.40, 11.59க்கு தாம்பரம் செல்லும் ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9.40, 10.15, 11 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: