நூல் விலை ரூ.5 உயர்வு, இனி வாரம் தோறும் நுால் விலை நிர்ணயம்: நூற்பாலைகள் அறிவிப்பு

திருப்பூர்: நூல் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளது. நடப்பு மாதத்தில் மட்டும் 3வது முறையாக நூல் 5 விலையை உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளது. பஞ்சு விலை தினமும் மாறுபடுவதால் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில், வாரம் தோறும் நூல் விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்று நூற்பாலைகள் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

பஞ்சு இறக்குமதி வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டதால், விலை குறைந்தது. நுால் விலையும், கடந்த 1 மற்றும் 15ம் தேதிகளில், கிலோவுக்கு தலா, 10 ரூபாய் குறைந்தது. விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐந்து ரூபாய் உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் பஞ்சு விலை உயர்ந்தது. இதனால் இந்தியாவிலும் பஞ்சுக்கு கிராக்கி அதிகரித்து, விலையும் உயர்ந்தது. அதிகபட்சமாக ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை, ரூ.71 ஆயிரம் வரை உயர்ந்தது. பின்னலாடை துணி உற்பத்திக்கு பயன்படுத்தும் ஒசைரி நூல் விலை கிலோவுக்கு ரூ.50 வரை உயர்த்தப்பட்டது.

இந்தத் தொடர் விலையேற்றம் காரணமாகத் திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி மற்றும் பின்னலாடைத் தொழில்துறையினர் பெரும் கவலையடைந்துள்ளனர். மேலும், உற்பத்திச் செலவு அதிகரிப்பதால் தொழில் முடங்கும் அபாயம் உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நுாற்பாலை உரிமையாளர்கள் கூறுகையில், “இந்திய பருத்தி கழகம், மீண்டும் பஞ்சு விலையை உயர்த்தியுள்ளது. கடந்த சில நாட்களில், கேண்டிக்கு, 1,000 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கேண்டி பஞ்சு விலை, மீண்டும், 68,000 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால், பஞ்சு விலையில், கிலோவுக்கு ஐந்து ரூபாய் விலை உயர்த்தியுள்ளோம். பஞ்சு விலை தினமும் மாறுபடுவதால், நஷ்டத்தை தவிர்க்கும் வகையில், மாதம் இருமுறை என்பதற்கு பதிலாக, வாரம் தோறும், திங்கட்கிழமை நுால் விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

 

 

 

Related Stories: