ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி

டெல்லி: பாஜகவின் அரசியல் முன்னோடியான பாரதிய ஜன சங்கத்தைத் தோற்றுவித்த சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சிறந்த தேசபக்தரும், அறிஞரும், அரசியல் மேதையுமான சியாம பிரசாத் முகர்ஜிக்கு நான் எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

அவரது அசைக்க முடியாத உறுதிப்பாடு, பொது வாழ்வில் காட்டிய தைரியம் மற்றும் தேசிய நலனுக்கான அர்ப்பணிப்பு ஆகியவை தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன. முகர்ஜியின் தியாகம் நம் அனைவரின் நினைவிலும் என்றும் நிலைத்திருக்கும். அவர் தனது கடைசி மூச்சு வரை போற்றி வளர்த்தாரோ. அவற்றின் வழிகாட்டுதலின் படி ஒரு வலுவான, பாதுகாப்பான மற்றும் முழுமையாக வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கு நாம் மீண்டும் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: