ஆணையாளர் குடும்பத்தினருக்கு ரூ.20.46 லட்சம் ஜிபே: ரெய்டில் ‘திடுக்’

 

பேரையூர்: மதுரை மாவட்டம், சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 4 மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவா மற்றும் அலுவலர்களிடம் இருந்து, கணக்கில் வராத ரூ.76 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அஜித், வங்கிக்கணக்கிலிருந்து, சேடபட்டி யூனியன் ஆணையாளர் (வ.ஊ) ராஜாவின் மனைவி, மகன், சகோதரர் கணக்குகளுக்கு,

கடந்த ஏப்ரல் மாதம் முதல் நேற்று வரை ரூ.20 லட்சத்து 46 ஆயிரம், ஜிபே மூலம் மாற்றப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இது பஞ்சாயத்திலும் நடைபெற்ற பணிகளுக்கான தொகையை வழங்குவதற்காக கான்ட்ராக்டர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணம் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆணையாளர் ராஜா மற்றும் அஜித் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: