14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணிமாற்றம்; மதுரை, திருப்பூர், சேலத்திற்கு புதிய கமிஷனர்கள் நியமனம்: உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவு

 

சென்னை: மதுரை, திருப்பூர், சேலத்திற்கு புதிய கமிஷனர்கள் நியமனம் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். தமிழக உள்துறை செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக லிமிடெட் விஜிலென்ஸ் ஏடிஜிபியாக இருந்த ஆயுஷ் மணி திவாரி காவல்துறை தலைமையிட ஏடிஜிபியாகவும், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஐஜி ராஜேந்திரன் மதுரை மாநகர போலீஸ் கமிஷனராகவும், மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த கபில் குமார் சரத்கர் சென்னை மாநகர வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராகவும்,

சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக இருந்த பிரவேஷ்குமார் கடலோர காவல் குழுமம் ஐஜியாகவும், சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த எஸ்.ராஜேஸ்வரி, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராகவும், சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஐஜி அனில் குமார் கிரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாகவும், சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த கார்த்திகேயன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஐஜியாகவும், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஐஜியாக இருந்த சாமூண்டீஸ்வரி சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை நவீனமயமாக்கல் பிாிவு ஐஜியாக இருந்த ஏ.ஜி.பாபு சென்னை மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனராகவும், சென்னை மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனராக இருந்த ஜோஷி நிர்மல் குமார் சேலம் மாநகர போலீஸ் கமிஷனராகவும், காவல்துறை விரிவாக்கம் பிரிவு ஐஜியாக இருந்த தேன்மொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்த ராதிகா காவல்துறை நிர்வாக பிரிவு ஐஜியாகவும், காவல்துறை நிர்வாக பிரிவு ஐஜியாக இருந்த சி.மகேஸ்வரி, லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு-1 ஐஜியாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு-1 ஐஜியாக இருந்த துரைகுமார் காவல்துறை விரிவாக்கம் பிரிவு ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: