துலுக்கம்பட்டி கிராமத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்

 

கந்தர்வகோட்டை, ஜூன் 22: துலுக்கம்பட்டி கிராமத்தின் சாலையை சீர் செய்து தெரு விளக்குகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் காட்டுநாவல் ஊராட்சியில் மூன்று ஆயிரம் மக்கள் வசிந்து வருகிறார்கள். இந்த ஊராட்சியில் ஒரு பகுதியான துலக்கம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ளது. இங்கு உள்ள மாணவ- மாணவிகள் கல்வி பயில கந்தர்வகோட்டை, தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற நகர்புறங்கரங்களுக்கு செல்லுகிறார்கள். பெரியவர்கள் தினசரி பணிக்காக வெளியூர் சென்று வருகிறார்கள். இவர்கள் வசித்து வரும் பகுதிகளில் உள்ள தார்சாலை கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் போடபட்டதாக கூறுகிறார்கள். இந்த சாலை தற்சமயம் பெயர்ந்து ஜல்லிகற்கள் சிதறி கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் டயர் பழுது அடைகிறது. பாதசாரிகள் நடந்து செல்ல சிரமம் அடைகிறார். இதனால் தார் சாலையை சீர்செய்து தெரு விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்ைக எழுந்து வருகிறது.

Related Stories: