திருச்செங்கோட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சுகாதாரத்துறைக்கு மருந்துகள் மட்டுமல்லாமல், அனைத்து மருத்துவ உபகரணங்களும் டிஎன்எம்எஸ்சி மூலமே வாங்கப்படுகிறது. சுகாதாரத்துறைக்காக வாங்கப்படுகிற எம்ஆர்ஐ மெஷின்கள் யுஎஸ் மற்றும் மற்றும் ஐரோப்பியன் ஸ்டாண்டர்ட் படி தான் வாங்கப்படுகிறது. தற்போது, 30க்கும் மேற்பட்ட எம்ஆர்ஐ கருவிகளை வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனத்திற்கு யுஎஸ் மற்றும் ஐரோப்பியன் ஸ்டாண்டர்டு இல்லாததால், டெக்னிக்கல் கமிட்டி அவர்களுடையதை நிராகரித்திருக்கிறார்கள். அதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளனர். இதுகுறித்து வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை. நீட் மாநில உரிமைகளுக்கு எதிரானது, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிரானது என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம்.
மருத்துவமும், கல்வியும் மாநில பட்டியலுக்கு வருவது தான், இதற்கான நிரந்தர தீர்வாக இருக்க முடியும். நீட் எதிர்கொள்ளும், மாணவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து சொல்வது இதுவும் ஒரு தேர்வு தான். இதுவே வாழ்க்கையின் முடிவு அல்ல. அதனால் யாரும் மன உளைச்சலுக்குள்ளாகி தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
