×

மகளிர் உலக கோப்பை டி.20; ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் இந்தியா: வலுவான தெ.ஆப்ரிக்காவுடன் இன்று மோதல்

மான்செஸ்டர்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 10வது ஐசிசி மகளிர் டி.20உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் மான்செஸ்டர் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் 18வது லீக் போட்டியில் குரூப் 1 பிரிவில் இந்தியா-தென்ஆப்ரிக்கா மோதுகின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தான், 2வது போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா இன்று ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் உள்ளது. மறுபுறம் தென்ஆப்ரிக்கா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற நிலையில் 2வது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்று தோல்வி அடைந்தால் அரையிறுதி வாய்ப்பு சிக்கலாகிவிடும் என்பதால் கட்டாய வெற்றி நெருக்கடியில் களம் இறங்குகிறது.

இரு அணிகளும் இதற்கு முன் 24 முறை டி.20 போட்டியில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 11ல் இந்தியா, 10ல் தென்ஆப்ரிக்கா வென்றுள்ளது. 3 போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டியில் தெஆப்ரிக்கா 4-1 என முன்னிலை வகிக்கிறது. இதுவரை நடந்துள்ள 9 டி.20 உலக கோப்பையில் இரு அணிகளும் பங்கேற்றுள்ள நிலையில், முதன்முறையாக இன்றுதான் நேருக்கு நேர் மோத உள்ளன.

Tags : Women's World Cup T20 ,India ,Africa ,Manchester ,10th ICC Women's T20 World Cup ,England ,South Africa ,Manchester Stadium ,
× RELATED ஐவரி கோஸ்ட் அணியை வீழ்த்தி 2வது வெற்றி;...