×

தொடர்ச்சியாக 2வது வெற்றி நாக்-அவுட் சுற்றில் அமெரிக்கா

உலக கோப்பை டி பிரிவில் இடம் பெற்றுள்ள அமெரிக்கா, தனது 2வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் உற்சாகமாக விளையாடிய அமெரிக்க வீரர்கள், ஆஸி.க்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

ஆஸ்திரேலியாவின் கேமரான் புர்கெஸ் 11வது நிமிடத்திலேயே ஓன் கோல் போட்டு எதிரணிக்கு முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து, அமெரிக்காவின் அலெக்ஸ் பிரீமேன் 43வது நிமிடத்தில் அற்புதமாக கோல் அடிக்க, அந்த அணி முதல் பாதி முடிவில் 2-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. 2-0 என்ற கோல் கணக்கில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்த அமெரிக்கா, நாக்-அவுட் சுற்று வாய்ப்பையும் உறுதி செய்தது.

Tags : USA ,Group D ,World Cup ,Australia ,Aussies ,Cameron Burgess ,
× RELATED ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள்...