×

அதிவிரைவில் உடைந்த அதிவேக கோல் சாதனை!

நடப்பு உலக கோப்பை தொடரில், ஒரு போட்டியில் முதல் கோலை அதிவிரைவாக போட்ட வீரர் என்ற பெருமையை மொராக்கோவின் இஸ்மாயில் சாய்பரி பெற்றார். ஸ்காட்லாந்துக்கு எதிரான சி பிரிவு லீக் ஆட்டத்தில் அவர் 2வது நிமிடத்தில்… சரியாக 71வது விநாடியில் கோல் அடித்து இந்த சானையை நிகழ்த்தினார். அதுவே மொராக்கோவின் வெற்றி கோலாகவும் அமைந்தது.

ஆனால், இஸ்மாயிலின் சாதனை சில மணி நேரங்கள் கூட நீடிக்கவில்லை. துருக்கிக்கு எதிராக நடந்த டி பிரிவு லீக் ஆட்டத்தில் பராகுவே வீரர் மதியாஸ் கலர்ஸா 65வது விநாடியே கோல் போட்டு இஸ்மாயிலின் சாதனையை நொறுக்கினார். இந்த போட்டியில் பராகுவே 1-0 என வெற்றியை வசப்படுத்த, துருக்கி வெளியேற்றம் உறுதியானது.

Tags : World Cup ,Morocco ,Ismail Saibari ,C Division League ,Scotland ,
× RELATED ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள்...