×

ஐவரி கோஸ்ட் அணியை வீழ்த்தி 2வது வெற்றி; ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு ஜெர்மனி தகுதி

டொரோண்டோ: 48 அணிகள் பங்கேற்றுள்ள 23வது பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கனடாவின் டொரோண்டோ மைதானத்தில் இன்று அதிகாலை நடந்தபோட்டியில் இ பிரிவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி-ஐவரி கோஸ்ட் அணியுடன் மோதியது.

விறுவிறுப்புடன் தொடங்கிய இந்த போட்டியில் ஐவரி கோஸ்ட் நட்சத்திர வீரர் பிராங்க் கெஸ்ஸி 30வது நிமிடத்தில் கோல் அடித்து ஜெர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதற்கு பதில் கோல் அடிக்க ஜெர்மனி போராடிய நிலையில் முதல்பாதியில் பலன் கிடைக்கவில்லை.

2வது பாதியில் மாற்று வீரராக களம் புகுந்த ஜெர்மனியின் டெனிஸ் உண்டாவ் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 68வது நிமிடத்தில் அவர் மிக நேர்த்தியாக ஒரு கோல் அடித்து 1-1 என சமநிலைக்குக் கொண்டு வந்தார். கூடுதல் நேரத்தில் (90+4’ நிமிடத்தில்) உண்டாவ் தனது 2வது கோலை அடித்து ஜெர்மனி அணியின்(2-1) த்ரில் வெற்றியை உறுதி செய்தார். டெனிஸ் உண்டாவ், ஜெர்மனி அணிக்காக 11 சர்வதேசப் போட்டிகளில் ஆடி 9 கோல்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் குராசோ அணியை 7-1 என சாய்த்திருந்த ஜெர்மனி இந்த வெற்றியால் 6புள்ளிகளுடன் ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு தகுதிபெற்றது.

Tags : Germany ,Ivory Coast ,Toronto ,23rd FIFA World Cup football ,United States ,Canada ,Mexico ,Toronto Stadium ,Ivory Coast… ,
× RELATED இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள்...