×

தமிழ்நாடு முழுவதும் மின்தடை ஏற்படுகிறது: அமைச்சர் நிர்மல்குமார் ஒப்புதல்

அவனியாபுரம்: தமிழகம் முழுவதும் 52 இடங்களுக்கும் மேலாக மின்தடை ஏற்படுவதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் மதுரை அவனியாபுரத்தில் நேற்று அளித்த பேட்டி:
தமிழக மின் வாரியத்தை ஐந்து மண்டலங்களாக பிரித்து, நிர்வாக பணிகளை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முறைகேடு செய்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மின்துறையில் இந்த ஆண்டு 15 ஆயிரம் பேரை பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் 52 இடங்களுக்கும் மேலாக மின்தடை ஏற்படுகிறது. இது எதனால் நடக்கிறது என்பது குறித்து, துறை சார்பாக அறிக்கை வெளியிடப்படுகிறது.

டிரான்ஸ்பார்மர் மெயின்டனன்ஸ் டெண்டர் நிறுத்தப்படவில்லை. இதற்கான மதிப்பீடுகளில் தவறு நடந்துள்ளது. இதனை சீரமைத்த பின், புதிய டெண்டர் விட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுக்கு எந்தவிதமான இழப்பும் இல்லாத வகையில் மதிப்பீடு செய்து புதிய டெண்டர் விடப்படும். டிரான்ஸ்பார்மர் ஊழல் பிரச்னையில் குற்றவாளிகளை விரைவாக கைது ெசய்யவே, சிபிஐ விசாரணை கோருகிறோம்.இவ்வாறு கூறினார்.

Tags : Tamil Nadu ,Minister ,Nirmal Kumar ,Avaniapuram ,Power Minister ,Madurai Avaniapuram ,Tamil Nadu Electricity Board ,
× RELATED தமிழகத்தில் உள்ள 46 கோயில்களின் உபரி...