×

பிபிஏ தேர்வு எழுதுவதற்காக போக்சோ வழக்கில் கைதான இணை அமைச்சர் மகனுக்கு இடைக்கால ஜாமீன்

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மக்களவை தொகுதி எம்பி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பகீரத். இவருக்கு எதிராக 17 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல் அந்த சிறுமியின் குடும்பத்தினர் நம்பிக்கைக்கு உரியர்கள் என்று நம்பி ஒரு குழுவின் அங்கமாகச் சில வழிபாட்டுத் தலங்களுக்கு அவர்களுடன் சென்றதாகவும் சிறுமியும், பெற்றோரும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துவதாகவும், மறுத்தபோது பணம் கேட்டு மிரட்டியதாகவும் எதிர் புகார் கொடுத்து இருந்தார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு பகீரத் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இதனிடையே பகீரத் தனது பிபிஏ தேர்வுகளை எழுதுவதற்காக வருகிற 25ம் தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Union Minister ,BBA ,Hyderabad ,Bageerath ,Karimnagar ,Lok Sabha ,Union ,Minister ,Bandi Sanjay Kumar ,Telangana.… ,
× RELATED மகாராஷ்டிராவில் பயங்கர விபத்து:...