தபால் ஓட்டு விருப்ப படிவம் 1397 பேருக்கு விநியோகம்

ஈரோடு,மார்ச்9: தபால் ஓட்டு போடுபவர்களுக்கான விருப்ப படிவமானது நேற்று வரை மாவட்டத்தில் 1397 பேருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்டவா–்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்களுக்கு விருப்ப படிவம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் நேற்று வரை 1397 பேருக்கு விருப்ப படிவமான 12டி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் கூறிதயாவது, ஈரோடு மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் 50,062 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 14,498 என மொத்தம் 64 ஆயிரத்து 506 பேருக்கு படிவம் “12டி” வழங்கும் பணி தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 1397 பேருக்கு விருப்ப படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இப்படிவங்களை வருகின்ற 12ம் தேதியில் இருந்து 16ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா–்கள் வீடுகளுக்கு வரும் போது வழங்க வேண்டும். தோ்தல் நடத்தும் அதிகாரி சம்பந்தப்பட்ட அனைத்து படிவங்களையும் குறிப்பிட்ட காலத்துக்குள் பெற்று  தபால் ஓட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்வார். வாக்குபதிவிற்கு 2 நாட்களுக்கு முன்பாக தபால் ஓட்டுகள் வீடு வீடாக வந்து பெற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினர்.

Related Stories: