திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே வடுகபட்டியில் மயான வசதி கேட்டு இறந்தவர் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆற்றின் அருகே மயானம் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் இறுதி சடங்குகள் செய்வதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மயானத்தில் போதிய இடமும் இல்லாததால் வேறு இடத்தை ஒதுக்கித் தரக் கோரி வடுகபட்டி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
