பாலக்காட்டில் இருந்து சென்ற ஓடும் பஸ்சில் மாரடைப்பு; மயங்கி விழுந்த பயணி சாவு

*காப்பாற்றும் முயற்சி தோல்வியால் சோகம்

பாலக்காடு : பாலக்காட்டிலிருந்து பட்டாம்பிக்கு சென்றுகொண்டிருந்த பஸ்சில் முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்கராவை சேர்ந்தவர் நாராயணன் (79).

இவர், நேற்று முன்தினம் காலை பாலக்காட்டிலிருந்து ஒத்தப்பாலத்திற்கு சென்ற தனியார் பஸ்சில் ஏறி பயணித்தார். பஸ் ஒத்தப்பாலம் அருகே லக்கிடி சந்திப்பு சாலையில் வந்துகொண்டிருந்த போது நாராயணனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

இதில், அவர் மயக்கமடைந்து விழுந்தார். முதியவரை காப்பாற்றுவதற்காக அந்த பஸ்சை வேறெங்கும் நிறுத்தாமல் ஒத்தப்பாலம் கண்ணியாபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனை வரை ஓட்டுநர் ஓட்டிச்சென்றார். பஸ்சில் இருந்த பயணிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பஸ் மருத்துவமனைக்கு விரைவாக வந்து சேர்ந்ததும் நாராயணன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நாராயணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், அவரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய ஓட்டுநர், நடத்துநர், சக பயணிகள் சோகம் அடைந்தனர். பஸ் ஊழியர்கள், பயணிகளின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஒத்தப்பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: