கோவையில் பிஐஎஸ் முத்திரை இல்லாத 38 எல்இடி.., டி.வி பறிமுதல்

 

கோவை, ஜூன் 18: கோவையில் இந்திய தர நிர்ணய அமைப்பு (பி.ஐ.எஸ்) முத்திரை இல்லாமல் எல்.இ.டி.., டி.வி, ஸ்பீக்கர்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை கிளை பிஐஎஸ் இயக்குனராக ரமேஷ் உத்தரவின் பேரில், கோவை பாரதியார் ரோட்டில் உள்ள ஒரு கடையில் பி.ஐ.எஸ். அதிகாரிகள் வினித்குமார், திவ்யா, கவுதம், சந்த்சோனி ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் பி.ஐ.எஸ் முத்திரை இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 38 எல்.இ.டி., டி.விகள் மற்றும் 71 புளூடூத் ஸ்பீக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து கோவை இந்திய தர நிர்ணய அமைப்பின் இயக்குனர் ரமேஷ் கூறுகையில், \\” பி.ஐ.எஸ் சட்டம் 2016-ன் படி முறையான பதிவு இல்லாமல் மின்னணுப் பொருட்களை விற்பனை செய்வது கடுமையான குற்றமாகும். இந்த சட்டத்தை முதன்முறை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் அபராதம் அல்லது இரண்டுமே சேர்ந்து விதிக்கப்படும். பொதுமக்கள் மின்னணு பொருட்களை வாங்கும் போது அதில் உண்மையான பிஐஎஸ் முத்திரை மற்றும் ஆங்கில எழுத்து ‘ஆர்’ என்று தொடங்கும் பதிவு எண் இருப்பதை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். இந்த முத்திரையின் உண்மை தன்மையை பிஐஎஸ் செயலி மூலம் சரிபார்க்க முடியும்\\” என்றார்.

Related Stories: