சென்னை: சர்வதேச அளவில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலையேற்றம் காரணமாக விமான எரிபொருள் விலை (ATF) பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உட்பட பல நகரங்களில் விமானங்களின் எண்ணிக்கை தற்காலிகமாகக் குறைக்கப்பட்டு, விமான கட்டணங்களும் கடுமையாக உயர்ந்துள்ளன.
இதனிடையே எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்த ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் சென்னை உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் வழங்கப்பட்டு வரும் விமான சேவைகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்துள்ளன
எரிபொருள் விலை உயர்வு காரணமாக சென்னையில் விமான சேவை குறைக்கப்பட்டு உள்ளது. சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சில விமான சேவைகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதன் காரணமாக குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
