சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,480க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். இதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை மேலும் அதிகரிக்க தான் செய்தது.

அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,070க்கும், பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12560க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை தொடர்ந்து 3 நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.4,560 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கத்தை போல வெள்ளி விலையும் நேற்று அதிரடியாக உயர்ந்தது. வெள்ளியை பொறுத்தவரையில் நேற்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.280க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் அதிகரித்து, பார் வெள்ளி ரூ.2.80 லட்சத்துக்கும் விற்பனையானது.

இதனையடுத்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.14,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.275க்கு விற்பனையாகிறது.

Related Stories: