ஜெய்ப்பூர் போராட்டத்தில் கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே மீது தாக்குதல்

ஜெய்ப்பூர்: நீட் தேர்வு முறைகேடு, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முறைகேடு தொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதில் அந்த கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கலந்து கொண்டு வருகிறார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, ​​தனது ஆதரவாளர்களின் தோள்களில் அமர்ந்து சென்றுகொண்டிருந்த அபிஜீத் தீப்கேவைச் சிலர் சுற்றி வளைத்து கன்னத்தில் அறைந்தனர். ஏராளமான இளைஞர்கள் திரண்டிருந்த ‘ஷஹீத் ஸ்மாரக்’ பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்களை பிடித்து வைத்துள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவத்தை தீப்கே ஒரு கோழைத்தனமான செயல் என்று குறிப்பிட்டார்.

இதுபற்றி அவர் கூறுகையில்,’உடல்ரீதியான தாக்குதல்கள் பயத்தின் அறிகுறியாகும். நாங்கள் அமைதியான முறையில் தொடர்ந்து எங்கள் குரலை உயர்த்துவோம்’ என்று தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: