×

என்சிஇஆர்டி 9ம் வகுப்பு பாட புத்தகத்தில் மொகஞ்சதாரோ நிர்வாண நடனமங்கை சிலை ஆடையால் மறைப்பு: பாடத்திட்ட உருவாக்கக் குழு தலைவர் எதிர்ப்பு

புதுடெல்லி: என்சிஇஆர்டியின் 9ம் வகுப்பு கலைக் கல்வி பாடப்புத்தகமான மதுரிமாவின் அறிமுக அத்தியாயமான கலை வரலாறு புத்தகத்தில் மொகஞ்சதாரோவின் கண்டெடுக்கப்பட்ட புகழ்பெற்ற வெண்கல நடன மங்கையின் சிலையின் படம் இடம்பெற்றது. வரலாற்று குறிப்புக்களின்படி இந்த சிலையானது முழுவதுமாக நிர்வாணமானதாக இருக்கும். அசல் கலைப்பொருட்களின் புகைப்படங்களுடன் ஒப்பிடுகையில் என்சிஇஆர்டியின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வெண்கல நடன மங்கை சிலையின் மேல் உடல் பகுதி மாற்றப்பட்டதாக தெரிகின்றது. உடலின் மேல் பகுதியில் ஆடை போன்ற அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சிற்பத்தில் தெரியும் உடற்கூறு விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து என்சிஇஆர்டியின் புதிய 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகங்களுக்கான பாடத்திட்ட உருவாக்கக் குழுவின் தலைவராக இருந்த மைக்கேல் டானினோ கூறுகையில், புதிய 9ம் வகுப்பு கலைப் பாடப்புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள படத்தை பார்த்தவுடன் என்னால் முதலில் நம்பவே முடியவில்லை. இந்தியக் கலை குறித்த ஒரு அத்தியாயத்தில் நடன மங்கை சிலை அதன் இயல்பான வடிவிலும் சரியான அளவுகளுடனும் இடம்பெற முடியாது என்றால் அது தீவிரமான பிரச்னையாகும். இந்த மாற்றம் அசல் கலைப்பொருளை தவறாக சித்தரிக்கிறது.

மைக்கலாஞ்சலோவின் டேவிட் சிலையில் திருச்சபை ஒரு அத்தி இலையை சேர்த்தது அந்த அழகான கலைப்படைப்பை எவ்வாறு தவறாக சித்தரித்ததோ அதேபோலவே இந்த மாற்றமும் அசல் கலைப்பொருளை தவறாக சித்தரிக்கிறது” என்றார்.

Tags : Mohenjo-daro ,Syllabus Development Committee ,New Delhi ,NCERT ,Madhurima ,
× RELATED டெல்லி ஏர்போர்ட்டில் வங்கதேசப்...