×

அயோத்தி கோயிலில் நன்கொடை முறைகேடு; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ளது பாபர் மசூதி. 2019-ம் ஆண்டு பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் அயோத்தியில் பாபர் மசூதியை மீண்டும் கட்டுவதற்கு ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தீர்ப்பளித்து இருந்தது. இதையடுத்து தொடர்ந்து அயோத்தியில் புதியதாக ராமர் கோயில் கட்டப்பட்டு தினமும் வழிபாடு செய்யப்படுகிறது. இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் அனூப் பிரகாஷ் அவஸ்தி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில்,‘‘அயோத்தி ஸ்ரீராம் ஜன்மபூமி திருத்தலத்தில் பக்தர்கள் மூலம் செலுத்தப்படும் காணிக்கைகள் முறையாக கையாளப்படுவது கிடையாது. குறிப்பாக நிதி கணக்குகளில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. கணிசமான தொகைகள் மற்றும் காணிக்கைப் பொருட்கள் காணாமல் போயிள்ளது. எனவே இந்த விவகாரம் குறித்து உடனடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். கோயிலுக்கு வரும் நிதியைக் கையாளுதல், கணக்கு பராமரித்தல், பாதுகாப்பு மற்றும் நிதியைச் செலவிடுதல் ஆகிய அனைத்து நடைமுறைகளையும் கண்காணிக்க உச்ச நீதிமன்றத்தின் கீழ் இயங்கும் ஒரு நிரந்தரக் கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்.

இல்லையென்றால் சிபிஐ போன்ற அமைப்புகள் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். குறிப்பாக உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் தங்களது உழைப்பில் வழங்கும் பங்களிப்பிற்கு தகுந்த பாதுகாப்பை உறுதி செய்து, கோயில் நிர்வாகத்தின் நிதிச் செயல்பாடுகளில் முழு வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த மனுவானது விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 பேர் குழு விசாரணை துவங்கியது
இதனிடையே இந்த முறைகேடு குறித்து விசாரிக்க லக்னோ பிரிவு ஆணையர் விஜய் விஸ்வாஸ் பந்த், ஐஜிபி கிரண் எஸ் மற்றும் நிதித்துறை சிறப்பு செயலாளர் நீல் ரத்தன் ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 3 பேர் குழுவினர் நேற்று அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவினர் விரிவான விசாரணை நடத்தி, அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

Tags : Ayodhya ,CBI ,Supreme Court ,New Delhi ,Babri Masjid ,Ayodhya, Uttar Pradesh ,Babri Masjid.… ,
× RELATED டெல்லி ஏர்போர்ட்டில் வங்கதேசப்...