×

கேரளத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசப் பயணம்: முதல்வர் வி.டி. சதீசன் தொடங்கி வைத்தார்

திருவனந்தபுரம்: காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி கேரளத்தில் அரசு பஸ்களில் நேற்று பெண்களுக்கான இலவச பயணத்திட்டம் தொடங்கியது. திருவனந்தபுரத்தில் இந்தத் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. கேரள முதல்வர் வி.டி. சதீசன் பெண்களுக்கான இலவச பயணத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் பிறகு முதல் பஸ்சில் முதல்வர் சதீசன், போக்குவரத்து துறை அமைச்சர் சி.பி. ஜான் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் தலைமைச் செயலகம் வரை பயணம் செய்தனர்.

கேரள அரசு தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் டிரைவரான ஷீலா இந்த பஸ்சை ஓட்டினார். ஜெயகுமாரி என்ற பெண் தான் இந்த பஸ்சில் கண்டக்டராகவும் இருந்தார். கேரளத்தில் மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
கேரளம் முழுவதும் இயக்கப்படும் 3125 சாதாரண பஸ்களில் வயது வித்தியாசமின்றி பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். திருநங்கைகளும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இலவசமாக பயணம் செய்வதற்கு கண்டக்டரிடம் எந்த ஆவணங்களையும் காட்டத் தேவையில்லை. வெளிமாநிலங்களில் இருந்து வரும் பெண்களும், வெளிமாநில தொழிலாளிகளும் இந்த வசதியை பயன்படுத்தலாம். இதற்கிடையே இந்தத் திட்டத்திற்கு பாஜ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Tags : Kerala ,Chief Minister ,V.T. Satheesan ,Thiruvananthapuram ,Congress ,
× RELATED டெல்லி ஏர்போர்ட்டில் வங்கதேசப்...