மின்மாற்றிகள் திறன் இழந்ததே தொடர் மின்தடைக்கு காரணம்: அமைச்சர் நிர்மல்குமார் புதிய விளக்கம்

மேலூர்: மின் மாற்றிகள் போன்ற உபகரணங்கள் சக்தியை இழந்து விட்டதே தொடர் மின்தடைக்கான காரணம் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், மேலூரில் தமிழக மின்வாரியத் துறை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று அளித்த பேட்டி:
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் சட்டப்பூர்வமாகவும், மக்களின் அமைதியை கருத்தில் கொண்டும் தீர்வு காணப்படும். நீதிமன்றத்தில் முறையிட்டு அமைதியான தீர்வை சட்டப்பூர்வமாக கொண்டு வருவோம். மக்களின் அமைதிக்கே 100 சதவீதம் முன்னுரிமை தரப்படும். தவறான முடிவுகளை எவர் எடுத்தாலும் அமைதிக்கு குந்தகம் ஏற்படும். முன்பு என்ன நிலை இருந்ததோ, அதே நிலைதான் வேண்டும். மதத்தை வைத்து அரசியல் செய்வதை தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள்.

மின்சார கட்டமைப்புகள் பல ஆண்டுகளாக பின்தங்கியுள்ளன. மின் மாற்றிகள் போன்ற உபகரணங்கள் பழையவற்றை வைத்தே மின்சார விநியோகம் செய்ததால், தற்போது அவை தங்கள் திறனை இழந்து மின்தடை ஏற்படுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 4 லட்சம் மின்மாற்றிகள் உள்ளன. மின்சார துறையின் தற்போதைய நிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: