கூட்டுறவு வங்கி முறைகேடு; சி.பி.சி.ஐ.டி. விசாரணை தேவை: மா.கம்யூ வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாலர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 40 கிராம் அளவுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கு ஈடாக பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இது தொடர்பாக நிலுவை விபரங்களை ஆய்வுக்குட்படுத்திய போது ஏராளமான தவறுகளும், முறைகேடுகளும் நடந்துள்ளதாக கூட்டுறவு பதிவாளர் வெளியிட்டுள்ள கடிதத்தின் மூலம் தெரிய வருகிறது. அதாவது, ஒரே நபர் 50க்கும் மேற்பட்ட கடன்களின் மூலம் ரூ1 கோடிக்கு மேல் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற இத்தகைய முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி வேண்டும். மேலும், துறைவாரியான விசாரணை என்பதற்கு மாறாக இத்தகைய முறைகேடு கிரிமினல் குற்றவியல் தொடர்பானது என்பதால் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்….

The post கூட்டுறவு வங்கி முறைகேடு; சி.பி.சி.ஐ.டி. விசாரணை தேவை: மா.கம்யூ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: