சட்டமன்ற தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் ரவுடிகளை கைது செய்ய கணக்கெடுப்பு பணி

திருப்பூர் , மார்ச் 8: சட்டமன்ற தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள ரவுடிகளை கணக்கெடுத்து, கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பொதுமக்கள்       அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு  நடைபெற்றது. இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தில் தேர்தலின் போது எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்கும் வகையில் மாநகர் மற்றும் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகளையும், குற்றவாளிகளையும் போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.

இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட எஸ்.பி.திஷாமிட்டல் ஆகியோர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள், ரவுடிகள் மற்றும் ஜாமினில் வெளியே வந்த குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் பற்றிய கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது அவர்கள் எங்கே உள்ளார்கள்? மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட உள்ளார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பழைய குற்றவாளிகள், ரவுடிகளை கணக்கெடுத்து அவர்களை கைது செய்தவற்கான நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories: