மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: சனிக்கிழமை, இந்த நாளினை ஆள் பிடிக்கிற வேலைக்காக ஒதுக்கி இருக்கிறது தவெக எனும் புதிய அரசு. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் தமிழ்நாட்டில் இதுவரை காணாததாக நடைபெறும் நிகழ்வுகள் வேதனையின் உச்சமாக இருக்கிறது. ஆஹா பேஷ், பேஷ் என்ற காபி விளம்பரத்தை போல கட்சியில் சேர வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
ஆனால் விஜய் அண்ணாவை மட்டும் யாரும் பார்க்க முடியாது. சனிக்கிழமை தோறும் ஆள் பிடிக்கிற வேலையில் இறங்கியுள்ளார்கள். அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேடன் புழு போட்டு மீனை பிடிப்பது, மீனை வாழவைக்க அல்ல, மீனை சாப்பிடத்தான்.
