×

மாமல்லபுரம் டிடிடிசி ஓட்டல் வளாகத்தில் அமைச்சர் ஆய்வின்போது ரீல்ஸ் எடுத்த தவெக பெண் நிர்வாகி

 

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி டிடிடிசி ஓட்டல் அமைந்துள்ளது. இங்குள்ள 3 கட்டிடங்களில் 24க்கும் மேற்பட்ட தங்கும் அறைகள் உள்ளது. இங்கு ரூ.20 கோடி மதிப்பில் பயணிகள் தங்கும் அறை, வரவேற்பு அறை, கூட்டரங்கு, பார் வசதி மற்றும் சமையலறையுடன் கூடிய நவீன கட்டிடம் கட்டுவதற்காக சில மாதங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில், புதிய கட்டிடத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து, டிடிடிசி விடுதி மாடியில் உள்ள கூட்டரங்கில் அதிகாரிகளை அழைத்து அமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

அதிகாரிகள் பாதாள சாக்கடை, சாலை வசதி, தெருவிளக்கு, போக்குவரத்து இடையூறு, கழிப்பறை மற்றும் குடிநீர் பிரச்னைகள் குறித்தும், பார்க்கிங் வசதி ஏற்படுத்துவது, சுற்றுலாவை மேம்படுத்த புதிய முயற்சிகள் உள்ளிட்டவைகள் குறித்தும் அமைச்சரிடம் தெரிவித்தனர். அப்போது, அமைச்சர் ராஜேஷ்குமார் பேசுகையில், மாமல்லபுரத்தை மேம்படுத்த பல்வேறு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் தெரிவித்த புகார்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாமல்லபுரம் டிடிடிசி விடுதி கூட்டரங்கில் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் ராஜேஷ்குமார் பேசிக் கொண்டிருக்கும்போது, தவெகவை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் அமைச்சரின் பேச்சை மறிக்கும் வகையில், செல்போனில் சுற்றி சுற்றி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : DTTC ,Mamallapuram ,TDTC Hotel ,East Coast Road ,Chennai ,
× RELATED காலி மதுபாட்டிலுக்கு ரூ.10 அளிக்காத விற்பனையாளரின் மண்டை உடைப்பு