வெவ்வேறு சம்பவங்களில் இளம் பெண், டிரைவர் மாயம்

திருச்சி, மார்ச் 7: திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் மற்றும் கார் டிரைவர் மாயமாகினர். திருச்சி திருவானைக்காவல் கன்னிமாரா கோயில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி(31), டிரைவர். இவரது அக்கா மகள் ரகன்யா(20). இவர் பெரியசாமி வீட்டில் தங்கி, திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 25ம் தேதி வேலைக்கு செல்வதாக சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பெரியசாமி ரங்கம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரகன்யாவை தேடி வருகின்றனர்.

இதேபோல திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னப்பன்(50), கார் டிரைவர். கடந்த 22ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் அம்மாசியம்மாள் பொன்மலை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சின்னப்பனை தேடி வருகின்றனர்.

Related Stories:

>