அரசு மருத்துவமனைகளில் முன்பதிவு செய்ய ‘பிரத்யேக செயலி’ உருவாக்கப்படும்: அமைச்சர் பேட்டி

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்., வளாகத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டம், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் காத்திக்கும் நேரம் அதிகமாக உள்ளது. இதற்காக, தனியார் வாயிலாக ‘பிரத்யேக செயலி’ உருவாக்கப்படும். அதில், ஆதார் பயன்படுத்தி, காலை 8 முதல் 9 மணி வரை முன்பதிவு செய்து கொள்ள முடியும். இவை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.

Related Stories: