குழந்தைகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எதிராக எந்த தொழில்களிலும் பணியமர்த்த கூடாது: முதல்வர் விஜய் வேண்டுகோள்

சென்னை: குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின த்தை ஒட்டி முதல்வர் விஜய் கூறியிருப்பதாவது: ஜூன் 12ம் நாள் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குழந்தை பருவதில் பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளால் வேலைக்கு செல்கின்ற குழந்தைகளை, அந்த கொடுமையில் இருந்து விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தை பருவத்தினையும், முறையான கல்வியினையும் வழங்கிட வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

ஒவ்வொரு குழந்தைக்கும், சுதந்திரமாக வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் கல்வி உரிமை போன்றவை அவசியமானதாகும். இவற்றை வழங்க மறுப்பது இயற்கை நியதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானதாகும். குழந்தைகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எதிராக எவ்வகையான தொழில்களிலும் குழந்தைகளை பணியமர்த்தக் கூடாது மற்றும் வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் பணியமர்த்த கூடாது. குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம். குழந்தை தொழிலாளர் முறையைத் தகர்ப்போம். கல்வி அளித்து குழந்தைகளின் வாழ்வை ஒளிரச் செய்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: