நீடிக்கும் வன்முறை, பதற்றம் மணிப்பூரில் 2 பேர் சுட்டு கொலை

இம்பால்: மணிப்பூரில் மெய்டீஸ் இனத்தை சேர்ந்த ஒய். யும்னம் கெம்சந்த் சிங் தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. இங்கு கடந்த ஆட்சியை போலவே தற்போதும் இனவன்முறை சம்பவங்கள் தொடர்கதையாக நீடிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமான 6 நாகா இன மக்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் காங்போக்பி மாவட்டத்தில் குல்துஹ் குகி என்ற சிறிய கிராமத்தின்மீது நேற்று அதிகாலை 4.55 மணிக்கு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் பொதுமக்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 30 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனிடையே, உக்ருல் மாவட்டத்தில் ஆயுதங்களுடன் திரிந்த 8 கிராமவாசிகளை பாதுகாப்பு படையினர் சிறைப்பிடித்துள்ளனர். அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர் பின்னர் கடும் எச்சரிக்கைக்கு பிறகு அவர்களை விடுவித்தனர்.

 

Related Stories: