பெங்களூரு: கர்நாடக மாநில சட்டப்பேரவையில் இருந்து மாநிலங்களவைக்கான 4 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 25ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அந்த இடத்திற்கு காங்கிரஸ் கட்சியிலிருந்து மாநிலங்களவைக்கு 3 உறுப்பினர்களும், பாஜவிலிருந்து ஒரு உறுப்பினரும் தேர்வு செய்யமுடியும்.
காங்கிரஸ் சார்பில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் கட்சியின் செயலாளர் மன்சூர் அலி கான், காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா ஆகிய மூவரும் பாஜ சார்பில் எம்.நாகராஜா வேட்புமனு தாக்கல் செய்தார். சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்டதால் கார்கே உள்பட நால்வரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
