விருத்தாசலம், சிதம்பரத்தில் ஆவணம் இன்றி எடுத்து சென்ற ₹2 லட்சம் பறிமுதல்

விருத்தாசலம், மார்ச் 7: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள பெரியவடவாடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த ராமானுஜம் என்பவரை வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர் எந்தவித ஆவணமும் இன்றி ஒரு லட்சம் ரூபாய் பணம் எடுத்து வந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் மங்கலம்பேட்டையில் உள்ள பிரபல மளிகை கடை வியாபாரியிடம் வாங்கி வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணம் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு, பணத்தை ஒப்படைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் விருத்தாசலம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சிதம்பரம்: சிதம்பரம் சட்டமன்ற தொகுதி நிலை கண்காணிப்பு குழு அலுவலர் சீனிவாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையிலான போலீசார் சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த பிரவீன்குமார் என்பவர் சீர்காழியில் இருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்ததும், உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் சிதம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories:

>