திருத்தணி: முருக்கம்பட்டியில் ஆடுகளை மேய்க்கவில்லை என்று கூறி சிறுவனை அடித்துக் கொன்று புதைத்த பண்ணை உரிமையாளர் முருகனை போலீசார் கைது செய்தனர். முருகன் வைத்திருந்த ஆடு , கோழி பண்ணையில் வெண்ணிலா என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். முருகன் அடித்து உதைத்ததில் சிறுவன் சுரேஷ் 3 மாதம் முன்பு உயிரிழந்துள்ளார். 3 மாதங்களாக வெண்ணிலாவை கட்டி வைத்து முருகன் சித்ரவதை செய்ததாக புகார் அளித்துள்ளனர்.
