ரகசிய வீடியோவை காட்டி மிரட்டி 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: சிறுவன் உட்பட 5 பேர் கும்பல் வெறிச்செயல்

 

சண்டிகர்: அரியானாவில் 16 வயது சிறுமியை மிரட்டி 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி, வழக்கம் போல் வீட்டில் இருந்த நிலையில் கடந்த 6ம் தேதி அதிகாலை 5 மணியில் இருந்து திடீரென காணவில்லை. சில மணி நேரம் கழித்து இருவர் அந்த சிறுமியை பைக்கில் கொண்டு வந்து வீட்டில் விட்டனர். இதுகுறித்து தனது மகளிடம் தந்தை விசாரித்தபோது, முன்பு மளிகை கடை வைத்திருந்த சவுகீன் என்பவர் சிறுமியின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்துக்கொண்டு, அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் உள்ளூர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சவுகீன் தவிர மேலும் 4 பேர் பல்வேறு காலங்களில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மைனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மைனர் உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்’ என்று கூறினார்.

Related Stories: