மறைந்த இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் மற்றும் பார்த்திபன் நேரில் அஞ்சலி

சென்னை: மறைந்த இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் மற்றும் பார்த்திபன் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், தமிழ் மண்ணின் பெருமை, அடையாளத்தை கலை வடிவில் பதிவு செய்தவர். திரையுலகில் நடிகைகள், நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை அறிமுகப்படுத்தி தன்னை வாழ வைத்த திரையுலகத்தை வாழ வைத்தவர் பாரதிராஜா. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவருடைய படைப்புகள் என்றென்றும் நிலைத்திருக்கும் . பாரதிராஜாவின் புகழ் என்றென்றும் மக்கள் மனதில் நீடிக்கும். திரையுலகில் யாருக்கேனும் பிரச்சனை என்றால் முதல் குரல் பாரதிராஜாவிடம் இருந்து வரும். எனது 50 ஆண்டுகால நண்பர் பாரதிராஜா என்று கூறினார்.

என் இனிய தமிழ் மக்களே ! என்னும் கம்பீர குரலை எப்படி நாம் கேட்போம். 1977 வந்த இயக்குனர்கள் அனைவருக்கும் பாரதிராஜா சாயல் தவறாமல் இருக்கும். சினிமா சமூகத்தை உருவாக்கியவர் பாரதிராஜா இன்றும் சினிமா என்றால் பாரதிராஜா தான். அவருடைய மறைவு ஈடு செய்ய முடியாமல் இருந்தால் கூட, அவரின் சினிமா சரித்திரத்தில் இந்த 50 ஆண்டுகள் பொற்காலம் என்று நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.

 

 

Related Stories: