வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

மேலூர், மார்ச் 7: சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம்; வாக்குக்கு பணம் கேட்க மாட்டோம் ஆகியவற்றிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மேலூர் பஸ்நிலையம் முன்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது. மேலூர் வருவாய் கோட்டாச்சியர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேலூர் வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: