ராஜபாளையம் அருகே சூறாவளி காற்றுக்கு மரம் சாய்ந்து பள்ளி வகுப்பறை, சுற்றுச்சுவர் சேதம்: ஆசிரியர்கள், மாணவர்கள் தப்பினர்

 

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே, சூறாவளி காற்றுக்கு பழமையான அரசமரம் சாய்ந்து பள்ளியின் வகுப்பறை, சுற்றுச்சுவர் சேதமடைந்தது.  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர் 500க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் நுழைவாயில் அருகே 100 ஆண்டு பழமையான அரசமரம் இருந்தது. இதன் கிளைகள் பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் வகுப்பறையில் உரசி சேதத்தை உருவாக்கி வந்தது. இதனால், கிளைகளை வெட்டி பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் காற்றின் வேகம் அதிமாக இருந்தது. மதிய வேளையில் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது வீசிய சூறாவளி காற்றுக்கு திடீரென அரசமரம் வேருடன் சாய்ந்தது. இதில், பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் வகுப்பறை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள், ஆசிரியர்கள் காயமின்றி தப்பினர். தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் மரம் மற்றும் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: