பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மதுபான பார்கள், பப்கள் கிளப்புகள் உள்ளிட்ட மது கிடைக்கும் அனைத்து இடங்களுக்குள் செல்வதற்கும், அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரித்து வருவதால் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மது அருந்துவதைத் தடுப்பதற்காக இந்த நடைமுறையை மாநில அரசு கொண்டுவந்துள்ளது.
