முதல்வர் தொகுதியில் தொடரும் மின்வெட்டு நள்ளிரவில் மக்கள் சாலை மறியல்

 

பெரம்பூர்: முதல்வரின் சொந்த தொகுதியான பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் மின்வெட்டு பிரச்னையால், பொதுமக்கள் தினசரி சாலை மறியலில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் வியாசர்பாடி மல்லிப்பூ காலனி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் ஒரு மணி வரை மின்தடை ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் சத்தியமூர்த்தி நகர் மல்லி பூ காலணி சந்திப்பு பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டனர். தகவலஅறிந்து அங்கு வந்த வியாசர்பாடி போலீசார், மின்வாரிய ஊழியர்களை வரவழைத்து உடனடியாக பழுதை சரி செய்து கொடுத்தவுடன் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

இதே போன்று எம்கேபி நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகர் 52வது பிளாக் முதல் 64வது பிளாக் வரை உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ஒரு மணி முதல் 2 மணி வரை மின்தடை பட்டதால் அப்பகுதி மக்கள் சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டனர். இவ்வாறு வியாசர்பாடி, சர்மா நகர், எருக்கஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மின் தடை ஏற்படுவதும், பொதுமக்கள் நள்ளிரவில் மறியலில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

 

Related Stories: