செங்கல்பட்டு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஆய்வு; எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்த கேள்விக்கு அமைச்சர் வெங்கடரமணன் எஸ்கேப்: தாமதமாக வந்ததால் அதிகாரிகள் அவதி

 

செங்கல்பட்டு, மே 28: செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியில் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு உள்ளது. இங்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் நேற்று ஆய்வு செய்ய வருவதாக கூறப்பட்டது. அதன்படி, அவர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்தார். இதனால் செங்கல்பட்டு கலெக்டர் மாலதி உட்பட அரசு அதிகாரிகள் அனைவரும் வெயிலில் அமைச்சருக்காக காத்திருந்தனர். தொடர்ந்து, 2 மணி நேரம் தாமதமாக வந்த அமைச்சர், துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கலெக்டர் மாலதி ஹெலன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முதல் அரசியல் நகர்வுகள் வரை பல்வேறு விவகாரங்களில் ஆளுங்கட்சி திணறி வரும் நிலையில் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைவது ஜனநாயக படுகொலை என பாமக தலைவர் அன்புமணி அண்மையில் பரபரப்பான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அவரது கேள்விக்கு உங்கள் பதில் என்ன என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு நாம இப்போ எங்கே வந்திருக்கிறோம்? இந்த இடத்தை பற்றி மட்டும் டிஸ்கஷன் செய்வோம் என்று நாசூக்காக பதில் அளித்துவிட்டு அங்கிருந்து நழுவினார்.

 

Related Stories: