நாண்ட்: உலக கோப்பைக்கு முன்னோடியாக பிரான்ஸ் மற்றும் ஐவரி கோஸ்ட் அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டம் பிரான்சில் உள்ள நாண்ட் நகரில் நடந்தது. இந்த பயிற்சி ஆட்டத்தில் எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்தது. ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் இருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. எம்பாப்பே பலமுறை ஐவரிகோஸ்ட் பெனாலிட்டி பாக்சிற்குள் புகுந்து அசத்தினார். ஐவரி கோஸ்டும் வாய்ப்பு கிடைத்தபோது தாக்குதல் நடத்தியது. ஆட்டத்தின் முதல் பாதி முடிவதற்கு சற்று முன் பிரான்ஸ் முன்னணி பெற்றது. ரியான் செர்கி கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
இரண்டாம் பாதியில் ஐவரி கோஸ்ட் வலுவாக போராடி மீண்டு எழுந்தது. 53வது நிமிடத்தில் அவர்கள் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தனர். கெலா டுவோ கோல் அடித்தார். பின்னர் பிரான்ஸ் அணியின் முன்னேற்றத்தை ஐவரி கோஸ்ட் அணி சிறப்பாக தடுத்து ஆடியது. இறுதியாக 83வது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் அணி இரண்டாவது கோல் அடித்தது. அமாட் தியாலோ கோல் அடித்தார். அதனால் பிரஞ்சு தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டது. பின்னர் அந்த அணியால் ஆட்டத்திற்கு திரும்ப முடியவில்லை. இறுதியில் 2-1 என்ற கோல்கணக்கில் ஐவரி கோஸ்ட் அணி வெற்றி பெற்றது.
பிபா கால்பந்து போட்டி; கட்டணமில்லாமல் டிக்கெட் பெற்ற ரசிகர்கள்;
வாஷிங்டன்: உலகமே 2026 பிபா கால்பந்தாட்ட போட்டியை காண ஆர்வமாக உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு களை கட்டி வருகிறது. இந்த நிலையில் கடந்த 3ம் தேதி கனடா நாட்டின் டொராண்டோவில் நடக்கும் உலக கோப்ைப போட்டிக்கான டிக்ெகட்டுக்கு முன்பதிவு செய்ய முயன்ற ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். டிக்கெட் முன்பதிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 60 ரசிகர்களுக்கு 0 கட்டணத்தில் அதாவது இலவசமாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடிந்துள்ளது. இதை பிபா அமைப்பு உறுதி செய்துள்ளது. தொழில்நுட்ப கோளாறை கண்டுபிடித்த பிபா, டிக்கெட் ரிசர்வ் செய்யப்பட்டிருந்தாலும், 7 நாட்களுக்குள் சரியான கட்டணத்தை செலுத்தவேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் முழு பணம் செலுத்தாவிட்டால் இந்த டிக்கெட்கள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.
