பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், செக் குடியரசுவை சேர்ந்த மென்சிக்கை 7:5, 6:2, 6:3, 3:6, என்ற செட் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினாவின் ஜெபல்லுஸ், ஸ்பெயினின் கிராநூலர்ஸ் ஜோடி, இத்தாலியை சேர்ந்த போலில், வாவாஸ்சோரி ஜோடியை 7:6, 6:4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் சைபீரியாவின் க்ருனிக், கஜகஸ்தானின் டேனிலா ஜோடி ஜப்பானின் ஆயோமா, சீனாவின் லியாங் ஜோடியை 7:5, 6:2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் செக் குடியரசுவின் சின்கோவா, அமெரிக்காவின் டவுன் சென்ட் ஜோடி பிரேசிலின் ஸ்டிபானி, கனடாவை சேர்ந்த டாப்ரோஸ்கி ஜோடியை 6:0, 6:1 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது. வென்ற அணிகள் இறுதி ஆட்டத்தை எதிர்கொள்கின்றன.
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்;இந்திய ஜோடி காலிறுதியில் தோல்வி;
ஜகார்த்தா: இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. நேற்று காலிறுதி ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தாய்லாந்தின் டீரரதசகுல், பிரான்சின் அலெக்ஸ் லீனரை 21-18, 7-21, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். கனடாவின் லால், பிரான்சின் போபாவை 21-8, 21-14 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். தைவானை சேர்ந்த சோயு, மலேசியாவை சேர்ந்த லி சாங்வை 21-15, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் தென்கொரியாவை சேர்ந்த ஒய்ஜே சிம், ஜப்பானை சேர்ந்த மியாஜாகியா 21-18, 21-15 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். ஜப்பானை சேர்ந்த யாமாகுசி, தைவானை சேர்ந்த சியுவை 21-13, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். சீனாவை சேர்ந்த சென், இந்தோனேசியாவை சேர்ந்த வார்தானியை 21-13, 22-21 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். தென்கொரியாவை சேர்ந்த எஸ்ஒய் ஆன் தாய்லாந்தை சேர்ந்த சோச்வாங்வுவை 21-19, 21-11 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியாவை சேர்ந்த கோப், இசுதீன் ஜோடி இந்தியாவின் அர்ஜூன், அம்சகருணன் ேஜாடியை 21-12, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. நேற்று முன்தினம் இந்தியாவின் பி.வி.சிந்து, ஆயுஷ் ஷெட்டி தோற்ற நிலையில் நேற்று கடைசியாக விளையாடிய இந்திய வீரர்களும் தோல்வியடைந்து இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.
