- பிரஞ்சு ஓபன்
- ஆன்ட்ரீவா
- பாரிஸ்
- பிரஞ்சு
- ஆண்ட்ரியா வவாசோரி
- சாரா எர்ரானி
- இவான் கிங்
- கேப்ரியெல்லா டபோர்ஸ்கி…
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதி போட்டியில் நம்பர் 1 இடத்தில் உள்ள இத்தியாலியை சேர்ந்த ஆண்டிரியா வவசோரி-சாரா எர்ரானி ஜோடி, அமெரிக்காவின் இவான் கிங்-கனடாவின் கேப்ரில்லா டேப்ரோஸ்கி ஜோடி உடன் மோதியது. இதில் முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்த இத்தாலி ஜோடி, அதிரடியாக ஆடி அடுத்த 2 செட்களை 6-3, 10-4 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கடந்த ஆண்டும் இதே ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் பியர்-ஹியூஸ் ஹெர்பர்ட்-குவென்டின் ஹாலிஸ் ஜோடி, நம்பர் 2 ஜோடியான பின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா-இங்கிலாந்தின் ஹென்றி பாட்டன் ஆகியோருடன் மோதியது. இதில் நம்பர் 2 ஜோடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. மகளிர் ஒற்றை பிரிவு அரையிறுதி போட்டியில் நம்பர் 8 வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, உக்ரைன் நாட்டு வீராங்கனையான கோஸ்ட்யூக்குடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய ஆண்ட்ரீவா 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
* அரையிறுதியில் கோபாலி, அர்னால்டி
ஆண்கள் பிரிவு காலிறுதி போட்டியில் பெலிக்ஸ் ஆஜர் அலியாசிம், இத்தாலியின் பிளாவியோ கோபாலி மோதினர். இதில், 6-4, 4-6, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் வென்று கோபாலி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில், இத்தாலி நாட்டை சேர்ந்த அர்னால்டி, சக நாட்டு வீரரான பெரிட்டினியுடன் மோதினார். முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் அர்னால்டி கைப்பற்றிய நிலையில், 2வது செட்டிலும் 5-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக பெரிட்டினிக்கு காயமடைந்ததால் அவர் போட்டியிலிருந்து விலகினார். இதனால் அர்னால்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 25 வயதான அர்னால்டி தனது டென்னிஸ் வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் சக நாட்டு வீரரான பிளாவியோ கோபாலியை அர்னால்டி எதிர்கொள்கிறார். மற்றொரு அரையிறுதியில் நம்பர் 2 வீரரான ஸ்வரேஸ்-மென்சிக் ஆகியோர் மோதுகிறார்கள்.
