×

ஆஸி.க்கு எதிராக 3வது ஒன்டே; 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி: 2-1 என தொடரையும் கைப்பற்றியது

 

லாகூர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்ற நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டிலாகூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 42 ஓவரில் 157 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் இங்கிலீஸ் 65 லாபுசாக்னே ,அலெக்ஸ் கேரி தலா 19 ரன் எடுத்தனர்.

பாகிஸ்தான் பவுலிங்கில் கேப்டன் ஷாகின்ஷா அப்ரிடி 3, அப்ரார் அகமது, சதாப் கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் 40, சதாக்கத் 27, சதாப் கான் நாட் அவுட்டாக 29 ரன் எடுத்தனர். 41.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்த பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரை 2-1 என கைப்பற்றியது. அப்ரிடி ஆட்டநாயகன் விருதும், அரஃபத் மின்ஹாஸ் (60 ரன், 7 விக்கெட்) தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Tags : Aussie ,Pakistan ,Lahore ,Australia ,
× RELATED சில்லிபாயிண்ட்…